Saturday, 15 February 2014
“பண்ணையாரும் பத்மினியும்”
படத்தோட கதை ஒரு காருக்கும் பண்ணையாருக்கும் இடையில நடக்கிற பாச போராட்டம். படம் மொத்தமும் ஒரு அஞ்சு பேர சுத்தி சுத்திதான் போகுது. ட்விஸ்ட் இல்ல பைட்டு இல்லை. காமிடிக்கின்னு தனியா ஒரு ட்ரேக் இல்ல. படம் அது பாட்டுக்கு போகுது கூடவே நம்மளையும் இழுத்துகின்னு போகுது. ஜெயபிரகாஷ் படத்தோட உண்மையான ஹீரோ அவரோட அக்டிங் சான்ஸ்சே இல்லை. அவருக்கும் அவரோட பொண்டாடிக்கும் இடையில நடக்கிற பாசம் + செல்ல சண்டைகள் அருமை. வழக்கம் போல விஜய் சேதுபதி கதா பாத்திரத்துக்கு காண கச்சித பொருத்தம். பீடையாக வரும் பாலசரவணன் (“பண்ணையாரும் பத்மினியும்” குறும்பட ஹீரோ) பண்ணும் காமிடி வயிறை பதம் பாக்கிது.
ஜெஸ்டின் பிரபாகரனோட இசை படத்துக்கு வலிமை. பாடல்கள் மயிலிறகின் மென்மை. சூப்பர் ஜி. கோகுலோட ஒளிப்பதிவு கிராமத்தில் வாழ்ந்த உணர்ச்சி. படத்தோட தீம் மாறாம விஜய் சேதுபதியோட லவ்வ கொஞ்சூண்டு தூவி. இதமா பதாமா இப்பிடி ஒரு படத்த தந்த அருண் குமாருக்கு தமிழ் ரசிகர்கள் சார்பான கோடான கோடி நன்றிகள். இதுவரைக்கும் படம் பாக்காதவங்க கண்டிப்பா போய் பாருங்க. ரெண்டரை மணிநேரம் சந்தோசமா இருக்கலாம்.
மொத்தத்தில் “பண்ணையாரும் பத்மினியும்” தமிழ் சினிமாவின் புதிய பரிமாணம்.
Pulivaal (Review as a common man)
கொரியன் படத்தில இருந்து கதைய உருவி, அத நம்ம நஸ்ரியவோட புருசன் மலையாளத்தில நடிச்சு, கன்னட மொழில ரீமேக் ஆகி பல விருதுகள வாங்கி குவிச்சு இப்போ தமிழ்ல வந்து சேர்ந்திருக்கிற படம்தான் “#புலிவால் ”....
செல்போனால அஞ்சு ஆறு பேரோட வாழ்க்கைல நடக்கிற சம்பவங்களோட கோர்வைதான் படம்....
பொதுவாவே #பிரசன்னா நடிக்கிற படங்கள் எல்லாமே நல்ல படங்கள் என்கிற கருத்து நிறைய பேருகிட்ட இருக்கு... அதிலயும் அவரு கிட்டத்தட்ட வில்லனா நடிச்ச எல்லாமே சூப்பர் படங்கள்.. (முரண், அஞ்சாதே, சென்னையில் ஒருநாள்) அவரோட அந்த இமேஜை இந்த படத்திலயும் காப்பாத்த லைட்டா ட்ரை பண்ணியிருக்காரு.....
#விமல் “வழக்கம்போலவே” நடிச்சிருக்காரூ......அனன்யா, ஓவியா, இனியான்னு மூணு பேர் இருந்தாலும் தேருறது என்னமோ அனன்யா தான்.....
சொர்ணமால்யாவும் ரெண்டு மூணு சீன்ல வாராங்க...”வாராங்க” அவ்ளோ தான்... எப்பிடி இருந்த புள்ள... நமீதாவே நாறிப்போற அளவுக்கு இருக்கு......அந்த கருமத்த படத்த பாத்தா தான் தெரியும்....
#சூரி, தம்பிராமையா ன்னு ரெண்டு காமடியன்கள் இருந்தும் சிரிப்புதான் வரமாட்டேன்கிது... நம்ம இமான் அண்ணாச்சிய போட்டாலாவது சொந்தமா காமடிபண்ணி சிரிக்க வச்சிருபாரு....
படத்தோட மிகப்பெரிய மைனஸ் த்ரில்லர் படத்துக்குரிய எந்த பரபரப்பும் படபடப்பும் கொஞ்சம் கூட இல்லாததுதான்.... ஜெட் வேகத்துல போக வேண்டிய ஒரு சூப்பர் கதையோட திரைக்கதையை ஆமை வேகத்துல ஆடி அசைச்சு தேர் ஓடுற ரேஞ்சுக்கு இழுத்தடிக்கிரதுதான் பொறுமையை ரொம்பவே சோதிக்கிது.....
மத்தப்படி படுமொக்கை படமெல்லாம் இல்ல.... சும்மா டைம் பாசுக்கு பாக்கலாம்...
#புலிவால் – வால் மட்டும்தான்.....

Idhu Kathirvelanin Kathal Review Exclusive :-
ஓகேஓகே கூட்டணி “#சுந்தரபாண்டியன்” டைரக்டர்ன்னு #இது_கதிர்வேலன் காதல் படத்துக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு. கதையோட சேர்ந்த காமிடி பமிலி என்டடைனர்ன்னு ஏதேதோ கற்பனை பண்ணிக்கிட்டு தியட்டருக்குள்ள போனா அவங்க பண்ணின அலப்பறையில அப்புடியே ஷாக் ஆயிபுட்டேன்.
படத்தோட தொடக்கம் யாரையோ அவசரமா ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போறாங்க. அப்பிடியே பாஸ் என்கிற பாஸ்கரன் ஸ்டைல்ல திர்லிங்கா படத்த ஆரபிச்சு காமிடி ராகில பிளாஸ்பக். அப்புறமா எதுக்கெடுத்தாலும் பிளாஸ்பக்ன்னு நம்ம பொறுமையா முள்ளு கரண்டிய வைச்சு சுரண்டி பாத்தாங்க. அப்புடியே அங்க சுத்தி இங்க சுத்தி காதல் , மொக்க வில்லன் என்னு கடைசியில அப்பா சென்டிமென்ட்ல படத்த முடிச்சாங்க. பக்கத்துல இருந்தவங்க படம் முடிஞ்சிரிச்சான்னு பேந்த பேந்த முழிச்சாங்க.
உதயநிதி, நயன்தாரா, சந்தானம், ஜெயபிரகாஷ், சரண்யா, சாயாசிங்ன்னு பெரிய கூட்டணி. உதயநிதி ஸார் ஒரு சின்ன டவுட்டு நீங்க என்ன “#மன்மோகன்சிங்” க்கு ஒன்னு விட்ட சித்தப்பா பையனா மூஞ்சி மேல எந்த ரியாக்சனும் காட்டவே மாட்டேன்குறீங்க. காதல், கோவம், செண்டிமெண்ட் எந்த சீனா இருந்தாலும் ஒரே ரியாக்ஷன் தான். ஒரு பாட்டு சீன்ல நயன்தாரா உங்கள கிஸ் பண்ணும் போது குடுத்திங்க பாருங்க ஒரு ரியாக்ஷன் அட அட அட கடிக்க கூடாத இடத்துல கட்டெறும்பு கடிச்ச மாதிரி. ப்ளீஸ் வேணாம் பாக்கிற சின்ன பசங்களுக்கு ஜன்னி வந்திர போகுது.
நயன்தாரா அழகுப்பதுமை நடிப்புலயும் அசத்துறாங்க. சரக்கு வற்றிப்போன சந்தானம். சில இடங்களில் மட்டும் தியட்டர் அதிருது. இத “சுந்தரபாண்டியன்” பிரபாகரனா டைரக்ட் பண்ணினாருன்னு சொல்லவே முடியல. திரைக்கதை குத்தலும் குதரலுமா சிதைஞ்சு கிடக்கு. பின்னணி இசை “ஜெராக்ஸ்” இசை. “வேணாம் மச்சான் வேணாம்” . “ஏலேகிச்சா வந்தாச்சு” , “குட்டிபுலி கூட்டம்” , “ஹைர ஹைர ஹைராப்பா” ன்னு எல்லாப் பாட்டும் நல்லா இருந்திச்சு (Do you know what I mean !!).
வேல வெட்டி ஏதும் இல்லைன்னா ஒரு தடவை மட்டும் படத்த பாக்கலாம். டிவி புரமோஷன் நாளைக்கு ஆரம்பிச்சுடும். ஆஸ்கார் அவாட் கிடைகுமுன்கிற மாதிரி அவனுக விடுற பீலாவ நம்பி படத்துக்கு போயிடாதீங்க. எதிர்பார்ப்பு எதுவுமே இல்லாம படத்துக்கு போங்க. சந்தோசமா இருங்க.
மொத்தத்தில் இது கதிர்வேலன் காதல் ...... இதுக்கு பேரு காதல்.... காதல்.... காதல்.... (சொல்லும் பொது மூணுவாட்டி தலையில அடிச்சுக்கணும்)

Subscribe to:
Posts (Atom)