Saturday, 15 February 2014

“பண்ணையாரும் பத்மினியும்”


ரொம்ப நாளைக்கு முன்னாடி “பண்ணையாரும் பத்மினியும்” அப்பிடின்னு ஒரு குறும்படம். நானும் ஏதோ அஜால் குஜால் படமுன்னு பாத்தா ஒரு கார வைச்சு செமையா ஒரு படம் எடுத்திருந்தாங்க. அப்புறமா “பண்ணையாரும் பத்மினியும்” படத்தோட first look பாத்ததும் ரொம்பவே கன்பியூஸ் ஆயிட்டேன். பத்து நிமிச குறும் படத்த எப்பிடிடா படமா எடுக்க போறானுவ என்னு. படம் பாத்து முடிஞ்சதும் அட போங்கப்பா சூப்பரோ சுப்பர்.

படத்தோட கதை ஒரு காருக்கும் பண்ணையாருக்கும் இடையில நடக்கிற பாச போராட்டம். படம் மொத்தமும் ஒரு அஞ்சு பேர சுத்தி சுத்திதான் போகுது. ட்விஸ்ட் இல்ல பைட்டு இல்லை. காமிடிக்கின்னு தனியா ஒரு ட்ரேக் இல்ல. படம் அது பாட்டுக்கு போகுது கூடவே நம்மளையும் இழுத்துகின்னு போகுது. ஜெயபிரகாஷ் படத்தோட உண்மையான ஹீரோ அவரோட அக்டிங் சான்ஸ்சே இல்லை. அவருக்கும் அவரோட பொண்டாடிக்கும் இடையில நடக்கிற பாசம் + செல்ல சண்டைகள் அருமை. வழக்கம் போல விஜய் சேதுபதி கதா பாத்திரத்துக்கு காண கச்சித பொருத்தம். பீடையாக வரும் பாலசரவணன் (“பண்ணையாரும் பத்மினியும்” குறும்பட ஹீரோ) பண்ணும் காமிடி வயிறை பதம் பாக்கிது.

ஜெஸ்டின் பிரபாகரனோட இசை படத்துக்கு வலிமை. பாடல்கள் மயிலிறகின் மென்மை. சூப்பர் ஜி. கோகுலோட ஒளிப்பதிவு கிராமத்தில் வாழ்ந்த உணர்ச்சி. படத்தோட தீம் மாறாம விஜய் சேதுபதியோட லவ்வ கொஞ்சூண்டு தூவி. இதமா பதாமா இப்பிடி ஒரு படத்த தந்த அருண் குமாருக்கு தமிழ் ரசிகர்கள் சார்பான கோடான கோடி நன்றிகள். இதுவரைக்கும் படம் பாக்காதவங்க கண்டிப்பா போய் பாருங்க. ரெண்டரை மணிநேரம் சந்தோசமா இருக்கலாம்.

மொத்தத்தில் “பண்ணையாரும் பத்மினியும்” தமிழ் சினிமாவின் புதிய பரிமாணம்.




No comments:

Post a Comment